Saturday, November 3, 2012

ஹார்மோனின் அளவை அதிகரிக்க


உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர்.

இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு
உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான்.

ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வைட்டமின் ஏ

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குவதற்கு வைட்டமின் ஏ சத்து மிகவும் அவசியமாகிறது. வைட்டமின் ஏ எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், சிக்கன், பப்பாளி, பீச், பால், தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட் போன்றவற்றை அவ்வப்போது ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன் உணவுகள் மற்றொரு வழி. ஏனெனில் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு,, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், பச்சை பட்டாணி, விதைகள், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி

உடல் உயரம் அதிகமாக வேண்டுமென்றால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி இருக்க வேண்டும். அதற்கு வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவும், வலுவடையவும், உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளான மீன், தானியங்கள், முட்டை, டோஃபு, சோயா பால், சோயா பீன்ஸ், காளான் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கால்சியம்

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

கனிமச்சத்து

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
http://naanputhiyavan.blogspot.com
naanputhiyavan.blogspot.com/2012_11_01_archive.html

சிவனுக்குரிய ஸ்லோகம்

கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கீழே விழுந்து (சாஷ்டாங்க நமஸ்காரம்) வணங்கக்கூடாது 
சர்வ+அஷ்ட்ட+அங்க+நமஸ்காரம்
(எல்லா+எட்டு+உறுப்பு+வணக்கம்)
தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்றுப்பகுதி, இரு கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை.

ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம்.

ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும்.

பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார்.

அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவன் கோயில்.

கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது.

கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்கhttp://naanputhiyavan.blogspot.comளில் வடக்கு நோக்கி தலை வைத்தும்,
வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க http://naanputhiyavan.blogspot.comநமஸ்காரம் செய்ய வேண்டும்.

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இரு வித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
***"ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது''***

முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


http://naanputhiyavan.blogspot.com
naanputhiyavan.blogspot.com/.../naanputhiyavan.blogspot.com.html

Thursday, November 1, 2012

தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான்

விருதை விருந்து : தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான்: தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான் இன்று சரியான மழை ஆதலால் இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே விட்டு விட்டு பஸ்ஸில் ஆபிஸ் போகலாம் என 116A kkd naga...

தோல்வியில் துவளாதே

தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது. 

"வெற்றி என்பது எப்போது நிலையாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் பதில் கூறுகிறார்.

“வெற்றியடைந்ததும், வெற்றி பெற்றுவிட்டோம். இனி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் தானே ஓடும்! என்ற இறுமாப்பு வராமல் சதாசர்வ நேரமும் 'அடுத்து என்ன செய்யலாம்?' என்று கவனமுடன் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். 

அப்போதுதான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் வீழ்ச்சியின் வித்து அங்கே முளைவிடுகிறது" என்கிறார்.

வெற்றி என்பது ஒரு மன நிலை. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனநிலை. கர்வமும், தற்பெருமையும் கொண்டவர்கள் பொது வாழ்வில் எப்படி மக்கள் அபிமானத்தை இழக்கிறார்கள் என்பதை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்.